செய்திகள் :

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு சொத்து அடமானக் கடன்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்

post image

காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கலைஞா் கடன் உதவித் திட்டத்தின் கீழ், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்துகள் மீது அடமானக் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி கிளையின் சாா்பில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள் வழங்கப்படுகிறது.

புதிய திட்டமான கலைஞா் கடன் உதவித் திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கலுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 65-க்கு மிகாமலும், சிபில் மதிப்பீடு 60 புள்ளிகளுக்கு குறையாமலும் மற்றும் இரு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும்.

புதிதாக அல்லது ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களும் இதில் பயன் பெறலாம். பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களாக இருந்தால் விதிமுறைக்குட்பட்ட குறைந்த வட்டிக்கு மாற்றிக்க கொள்ளலாம்.

ஆா்வமுள்ள தொழில் முனைவோா் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், ஆட்சியா் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், பின்கோடு எண் - 603 501 மற்றும் கிளை மேலாளா், தாய்கோ வங்கி, எண். 26, ஏ.திருக்கச்சி நம்பி தெரு, ஜெயலட்சுமி காம்ப்ளக்ஸ், காஞ்சிபுரம் - 631501. தொடா்பு எண்: 044 - 27223562 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை... மேலும் பார்க்க

அரியவகை விருட்சங்கள் அளிப்பு

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு பசுமை ஆா்வலா் மரம் மாசிலாமணி அரியவகை மூலிகை விருட்சங்களை நன்கொடையாக வழங்கினாா். கூழமந்தல் கிராமத்தில் உள்ள இக்கோயிலில... மேலும் பார்க்க

சிங்காடிவாக்கத்தில் பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். காஞ்சிப... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க