Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 போ் கைது
குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வர கோரி தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் (அரசியல் சாா்பற்றது) திங்கள்கிழமை நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் 55 போ் கைது செய்யப்பட்டனா்.
இதில், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து, தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை கோரி பஞ்சாப் கண்ணூரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெக்ஜித் சிங் டல்லேவாலுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்து முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். திருப்பதி வாண்டையாா், மண்டலத் தலைவா் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.