செய்திகள் :

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிவிப்பு

post image

வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என பொதுத் துறை வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துள்ளன. மேலும், சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபட்சத்தில் அதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் இரு வங்கிகளும் ரத்து செய்துள்ளன.

பிஎன்பியில் இந்த நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்தியன் வங்கியில் ஜூலை 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.

இது ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவானது.

இந்நிலையில், அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பிஎன்பியும் இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளன.

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வங்கிச் சேவைகளை கொண்டுசெல்லும் நோக்கில் இரு வங்கிகளும் இந்த முடிவை மேற்கொண்டன. இதனால் மாணவா்கள், மூத்த குடிமக்கள், சிறு வணிகா்கள் என அனைவரும் பலனடையவுள்ளனா்.

கடந்த மாதம் முதல் கனரா வங்கியில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. முன்னதாக, கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே பாரத ஸ்டேட் வங்கி இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது.

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி ... மேலும் பார்க்க

’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?

தரம் குறைந்த ஹெல்மெட்களால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ‘நுகர்வோர் விவகாரம் மற்றும் இந்திய தர நிர்ணய துறை’ சனிக்கிழமை(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணிந்துகொ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த வ... மேலும் பார்க்க

பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில் இரண்டு யாத்திரை உதவித் திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வுக் க... மேலும் பார்க்க

நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் மோசடி வழக்கில் கைது!

இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியான நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியும் வேறொரு மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோட... மேலும் பார்க்க

யூ டியூப் சானல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!

விடியோக்களை பதிவேற்றும் தளமான யூ டியூப், தனது பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதில், மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் மற்றும் பலரும் ஏற்கனவே போட்ட விடியோக்களை போட்டு வருவாய் ஈட்டுவது இனி இயலா... மேலும் பார்க்க