குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
குறைவாகவே கடன் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஒவ்வொரு நிதியாண்டும் நிதிக்குழு நிர்ணயம் செய்த அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்.
மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. விமான நிலையத்தை எதிர்த்து போராடும் பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். மக்களின் குறைகளை விஜய் கேட்டு அரசிடம் கூறினால் அதனை சரிசெய்ய பரிசீலனை செய்வோம்.
திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்!
விமான நிலையங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது. தற்போது உள்ள விமான நிலையம் மிகச் சிறிய ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. தொழில், வர்த்தக கட்டமைப்பை உறுதிசெய்ய பரந்தூர் விமான நிலையம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.