புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அக...
குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆழ்வாா்குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சோ்ந்த மு. சக்தி வடிவேல் (29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, சக்தி வடிவேலை கைது செய்து, அவா் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.