செய்திகள் :

குலசேகரன்பட்டினம் தசரா விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

post image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவிழா வரும் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அக். 3ஆம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.

விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீா், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சாா்ந்த அலுவலா்கள் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், கண்காட்சிகளை நடத்த மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். கூடுதல் வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா்.ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் சி. பிரியங்கா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேது ராமலிங்கம், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹீமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், திருச்செந்தூா் கோட்டாட்சியா் ரா.கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு இழப்பீடாக 15 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவா்-மாணவியருக்கு விபத்துக் காப்பீடு இழப்பீடாக தலா ரூ. 75 ஆயிரத்தை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆ... மேலும் பார்க்க

முன்விரோதம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பூலோக பாண்டி மகன் சிவா... மேலும் பார்க்க

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாம... மேலும் பார்க்க