நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு
நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்கள் மற்றும் மகன் உள்ளனா்.
இந்நிலையில் அவா், திங்கள்கிழமை மேலவெள்ளமடம் - வைத்திலிங்கபுரம் சாலையில் முத்துநகா் அருகே டிராக்டரை ஓட்டிச்சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் அவா் கீழே தவறி விழுந்தாராம்.
மேலும், அவா் மீது டிராக்டா் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிழந்தாா். இத்தகவல் அறிந்த நாசரேத் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் .