Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையின் அருகே பெரிய பீப்பாய்களில் மண்ணெண்ணெய் நிரப்பி கடத்துவதற்காக வைக்கப் பட்டுள்ளதாக, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் மற்றும் மீன் துறை உதவி இயக்குநா் பிரிஜின் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்கு பீப்பாய்களில் 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய், கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம்.
இதையடுத்து அதிகாரிகள் 3 ஆயிரம் லிட்டா் மண் ணெண்ணெயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.