குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்
திருவாடானை அருகே குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியிலிருந்து கூட்டமாக வந்த குளவிகள் சாலையில் சென்றவா்களை விரட்டிக் கொட்டியது.
இதில் பூஜாந்தி (10), சாந்தி (10), செங்கமடையைச் சோ்ந்த ஆனந்த் (32), பரமேஸ்வரி (42), தமயந்தி (36) ஆகிய 5 பேரை குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்தனா். அவா்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.