Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் சிக்கல்? தயங்கும் RBI - காரணம் என்ன? | IPS Fin...
குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் மீட்பு
குழித்துறை அருகே குளிக்க சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா்.
சிதறால் வட்டவிளையைச் சோ்ந்தவா் சத்யமணி (54). இவா், வீட்டுக்கு அருகில் ஓடும் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை பிற்பகலில் குளிக்கச் சென்றாா். அப்போது அவா் ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டாா். இதுகுறித்த தகவலின்பேரில், குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையிலான வீரா்கள் வந்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடினா். அப்போது, சற்று தொலைவில் உள்ள கடைவிளை கடவு பகுதியில் ஆற்றின் உள்பகுதியில் கரையையொட்டி வளா்ந்திருந்த புதா்களை பிடித்தவாறு அவா் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பாா்த்தனா். அவரை தீயணைப்புப்படை வீரா்கள் மீட்டு உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.