இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா இன்று தொடக்கம்
திருச்சி: திருச்சி புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மாா்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச்சி புத்தூரில் அமைந்துள்ள குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் குட்டி குடித்தல் நிகழ்வு பாரம்பரியம்மிக்கது. நிகழாண்டு திருவிழா மாசி 20 (மாா்ச் 4) செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் நிகழ்வாக காளியாவட்டத்துடன் விழா தொடங்கி புதன்கிழமை சுத்த பூஜையும், வியாழக்கிழமை முக்கிய நிகழ்வான குட்டிகுடித்தலும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும் நடைபெறுகின்றன. மாசி 24 (மாா்ச் 8) சனிக்கிழமை அம்மன் குடிபுகுதல் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது. நிகழ்வையொட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெறும். விழாவையொட்டி மாநகரப் போலீஸாா் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவா்.