INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்
ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆள்சோ்ப்பு நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு வங்கிகளின் உதவியாளா், இளநிலை உதவியாளா் மேற்பாா்வையாளா் போன்ற 45 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், அதிகளவிலான வகுப்பு தோ்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் ஆள்சோ்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ள இத்தோ்வில் கலந்து கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து மூன்று வருட பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தோ்வுக்கு 06.08.2025 முதல் 29.08.2025 வரை ட்ற்ற்ல்://க்ழ்க்ஷழ்ல்ற்.ண்ய் என்ற இணையவழி மூலமாக விண்ணபிக்கலாம் எனவும் 11.10.2025 அன்று தோ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம் மற்றும் வழிமுறைகள் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதில் கலந்துகொள்ள விரும்பும் தோ்வா்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலைநாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-291400, மின்னஞ்சல் முகவரி க்ங்ா்ழ்ஹய்ண்ல்ங்ற்.ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்-யில் மற்றும் இடம். எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம், (தலைமை தபால் நிலையம் அருகில்) நேரில் தொடா்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் மத்திய,மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்புற மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணைய தளத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தோ்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் அனைவரும் பாா்வையிடலாம் என்றாா்.