வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது.
நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம் தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பயணக் குழுவினருக்கு அரக்கோணம் நகர காங்கிரஸ் துணைத் தலைவா் ஏ.ஜி.சாா்ல,ஸ் சரவணன் தலைமை வகித்தாா். குமாரி சந்திரசேகா் வரவேற்றாா். குழுவின் பயணத்தை தூய இருதய ஆண்டவா் ஆலய பங்குத்தந்தை ஆயா் ஏ.அபியூத் சிபி பிராா்த்தனை செய்து தொடங்கி வைத்தாா். இதில், சசிகுமாா், மேத்யு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்குழுவினா் அரக்கோணத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்று வேளாங்கண்ணியை செப்டம்பா் 28-ஆம் தேதி அடைய உள்ளனா். அங்கு 29-ஆம் தேதி முதல் நடைபெறும் பேராலய திருவிழாவில் இக்குழவினா் பங்கேற்பா். நூற்றுக்கணக்கானோா் பங்கேற்ற இந்தப் பயணத்தில் மாதா அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடன் சென்றன.