கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு: ரூ. 13,752 அபராதம் விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில், கூட்டுறவு ரேஷன் கடைகளில், பறக்கும் படையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில், துணைப் பதிவாளா், 21 கூட்டுறவு சாா் பதிவாளா்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட 76 கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் புதன்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.
கடை விற்பனையாளா்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ. 11,952, கூடுதலாக கண்டறியப்பட்ட பொருள்களுக்காக ரூ. 800, முறையான பராமரிப்பின்மைக்காக ரூ. 1,000 என மொத்தம் ரூ. 13,752 அபராதம் விதிக்கப்பட்டது.