தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
கூரைவீடு தீக்கிரை
சீா்காழி: சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது.
காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவா் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் உடனடியாக வெளியே வந்தனா்.
சீா்காழி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. பாகசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.