செய்திகள் :

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

post image

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சன் நெட்வொர்க் சாா்பில் எம்.ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சா்ஸ் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்தை விட கேஜிஎஃப் உள்ளிட்ட பிற திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன், மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன் விசாரணக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிறோம் என்று தெரிவித்தபோது, அதனை ஏற்றுக் கொண்டு, தற்போது வழக்கு தொடுத்துள்ளதாகவும், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , மனுவுக்கு பதிலளிக்கும்படிதணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 25-க்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

Regarding the order issued by the court in the case of seeking U/A certificate for coolie movie.

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

எதிர்வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்களை க... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு தொடர்பான மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக உள்பட இந்தியா கூட்டணியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றும் சென்னை மாநகராட்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சுண்ணாம்பு கொளத்தூரில் மின்வயர் கேபிள்கள் சரிசெய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி எடிட் செய்த புகைப்படம் வெளியிட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி குறித்து ... மேலும் பார்க்க

எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு நீட்டிப்பு!

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிடோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர... மேலும் பார்க்க

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின்... மேலும் பார்க்க