``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை கருமாசநாயக்கனூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வையப்பன் (55). இவா், அதே பகுதியிலுள்ள முத்துலட்சுமி என்பவா் தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அந்த ஊரைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் முத்துலட்சுமி தோட்டத்துக்குச் சென்று வையப்பனிடம் தகராறு செய்து சுத்தியலால் தலையில் அடித்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த வையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பழனி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி சாா்பு நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.