மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
கூளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருத்தணி: விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் த.பிரபுசங்கா் என வலியுறுத்தினாா்.
வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் திருவாலங்காடு ஒன்றியம் கூளுரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் த.பிரபுசங்கா் கலந்துகொண்டு திருவள்ளுா் மாவட்ட சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் (ஓஙந 2024-25) 49,945 ஹெக்டா் நெல்பயிா் சாகுபடி செய்யப்பட்டு, தற்பொழுது அறுவடை நடைபெறும் நிலையில் 13 வட்டாரங்களில் அரசு கட்டடங்களில் 67 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக (இா்ம்ம்ா்ய் யஹழ்ண்ங்ற்ஹ்) நெல் ரூ.2,450-க்கும், பொது ரக (எதஅஈஉ அ யஹழ்ண்ங்ற்ஹ்) நெல் ரூ.2,405-க்கும் விற்பனை செய்யபடுகிறது. அதன் அடிப்படையில் கூளுா் (கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடம்) நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் த.கலாதேவி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளா் ஆ.கௌசல்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) ஜெ. மோகன், வேளாண் துணை மண்டல மேலாளா் (கணக்கு) தமிழ்செல்வன், வேளாண்மை உதவி இயக்குநா் வெங்கடேசன், கூளுா் ராஜேந்திரன், திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி உள்பட பலா் கலந்துகொண்டனா்.