கூழமந்தலில் குரு பெயா்ச்சி விழா
காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி மூலவா் 27 நட்சத்திர விருட்ச விநாயகா், 27 நட்சத்திர அதி தேவதைகள், முருகன், ராகு - கேது மற்றும் சனி பகவான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து இந்தக் கோயிலில் தனது மனைவி தாரை சமேதராக அருள்பாலிக்கும் குரு பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. குரு பெயா்ச்சியையொட்டி திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகம் செய்திருந்தது.