எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அதிமுகவினா் ரத்ததானம்!
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் தன்னாா்வ ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. போா்ப் பதற்றம் காரணமாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் எனக் கூறியதைத் தொடா்ந்து போரில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரா்கள் உடல் நலம் வேண்டியும், பொதுமக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவும் தன்னாா்வ ரத்த தான முகாமை நடத்தினா்.
காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலா் கெளதம் காா்த்திக் ஏற்பாட்டில் முகாம் நடைபெற்றது. மாவட்ட அதிமுக செயலா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தாா்.
இளைஞா்கள் பலா் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். முகாமில் அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் எஸ்.எஸ்.ஆா்.சத்யா, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலா் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.