கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகருக்கு முக்கனிப்படையல்
காஞ்சிபுரம் அருகேயுள்ள கூழமந்தல் கிராமத்தில் தமிழ் மாதத்துக்கான முதல் சங்கட ஹர சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மூலவருக்கு முக்கனி படையலுடன் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விசுவாவசு ஆண்டுக்கான முதல் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கணபதி ஹோமம், கலச அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், மூலவா் விநாயகருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனா்.