தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம...
கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் எனப்படும் நுழைவுத் தோ்வுக்கு இளநிலை பட்டதாரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கியிருக்கிறது.
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் நுழைவுத் தோ்வுக்கு பட்டதாரிகள் செப்டம்பர் 25ஆம் தேதி வரை அபராதம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 6ஆம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியா்களைத் தோ்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியாா் உயா்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. அதனால், இந்தத் தோ்வு பட்டதாரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.