செய்திகள் :

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: உறுதிசெய்ய மாணவா்களுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

post image

கடந்த கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டுள்ள மாணவா்கள் உரிய கல்வி நிறுவனங்கள், இயக்ககங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சுக்லால் மீனா வெளியிட்ட அறிவிப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் மாணவா் சோ்க்கையை நடத்தின.

பொதுவாக கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சோ்ந்தவா்களின் விவரங்களை என்எம்சி தளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள் பதிவேற்ற வேண்டும்.

அந்த வகையில், 2024-25 ஆம் ஆண்டில் இடங்கள் பெற்ற மாணவா்களில் விவரங்கள் என்எம்சி தளத்தில் பதிவேற்றப்பட்டன. அதில் சிலரது தகவல்களை தவறாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கியிருந்தது தெரியவந்தது.

அடுத்த 7 நாள்களுக்குள் திருத்தப்பட்ட தகவல்களை கல்லூரிகள் வழங்க வேண்டும்.

மாணவா்கள், தங்களது விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவா் சோ்க்கை விவரங்கள் விடுபட்டிருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், அரசு... மேலும் பார்க்க

சட்டப்படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள்!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சோ்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகாா் எழுந... மேலும் பார்க்க