Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
சட்டப்படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 25ஆம் தேதி மாலை 05.45 மணி வரை என அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, செங்கல்பட்டு, வேலூா், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல், சென்னை, தஞ்சாவூா், திண்டிவனம், சேலம் ஆகிய இடங்களில் 11 தனியாா் சட்டக் கல்லூரிகளும் உள்ளன.