செய்திகள் :

கேம் சேஞ்சர் ஓடிடி தேதி!

post image

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் ஜன. 10 வெளியானது. அரசியல் கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதையும் படிக்க: விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு!

இதனால், வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதல் நாள் வசூலாக கேம் சேஞ்சர் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், உண்மையில் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்க வசூலில் இதுவரை ரூ. 150 கோடிகூட வசூலிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப். 7 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலரை மணக்கிறார் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் தன் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால், சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இ... மேலும் பார்க்க

10 கோடி பார்வைகளைக் கடந்த மினுக்கி... மினுக்கி..!

தங்கலான் படத்தில் இடம்பெற்ற ‘மினுக்கி மினுக்கி’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்த... மேலும் பார்க்க

மீண்டும் மாகாபா உடன் இணையும் செளந்தர்யா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை செளந்தர்யா மாகாபா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாகாபா கேள்வி கேட்கும் டாஸ்க்கில் செளந்தர்யா பங்கேற்றிருந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன்?

நடிகர் உன்னி முகுந்தன் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.ஹிந... மேலும் பார்க்க

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்ப... மேலும் பார்க்க