பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கேரளத்தில் தீவிரமடையும் பருவமழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 11) இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்துடன், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 12 -ல் 2 மாவட்டங்களுக்கும், ஜூன் 13 -ல் 4 மாவட்டங்களுக்கும், ஜூன் 14 -ல் 9 மாவட்டங்களுக்கும், ஜூன் 15 -ல் 14 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று (ஜூன் 11) முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கேரள - கர்நாடகம் - லச்சத்தீவு கடல்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த மே 24 ஆம் தேதி முன்கூட்டியே துவங்கிய பருவமழையால், அம்மாநிலத்தில் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!