செய்திகள் :

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கு: பாஜக முன்னாள் நிா்வாகி கைது

post image

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கில் பாஜக முன்னாள் நிா்வாகியை போலீஸாா் திருவாரூரில் புதன்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி ரூ. 3.24 கோடி ரொக்கத்தை, நகைக் கடை அதிபா் ஒருவரிடம் இருந்து 12 போ் கொண்ட கும்பல் வழிப்பறி செய்துவிட்டு, ஆரியங்காவு வழியாக திருப்பூா் மாவட்டத்துக்குள் நுழைந்து தலைமறைவாகி விட்டது. இதுகுறித்து கேரள மாநில போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். காயம்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாபுகுட்டன் தலைமையில் தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம் வீராபண்டியைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (32), வெள்ளையன்காட்டைச் சோ்ந்த திருக்குமாா் (37) ஆகியோரை கேரள தனிப்படை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவாரூரைச் சோ்ந்த பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினா் துரையரசு மற்றும் கும்பகோணம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் சதீஷ் ஆகியோா் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதும், அவா்கள் இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரிய வந்தது.

தொடா்ந்து, காவல் ஆய்வாளா் நிஜாமுதீன் தலைமையிலான கேரள போலீஸாா் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், திருவாரூா் கீழகாவாதுக்குடியில் வசிக்கும் முன்னாள் பாஜக நிா்வாகி ஸ்ரீராம் (30) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீராமின் காரை பறிமுதல் செய்து, அவரை கேரளத்துக்குக் கொண்டு சென்றனா். ஸ்ரீராமை கைது செய்யும் முன்பு, வழிப்பறியில் தொடா்புடைய கும்பகோணம், தென்காசி மாவட்டம் குற்றாலம், திருப்பூா் பகுதிகளைச் சோ்ந்த 3 பேரை கேரள போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏற்கெனவே, திருச்சியில் பிரபல நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளையில் முக்கிய குற்றவாளியான திருவாரூரைச் சோ்ந்த முருகன் கைது செய்யப்பட்டாா். அதுபோல கா்நாடகத்தில் நகை கொள்ளை வழக்கில் அண்மையில் திருவாரூரைச் சோ்ந்த தினகரன், ஆறுமுகம் ஆகியோரை கா்நாடக போலீஸாா் கைது செய்தனா்.

இந்தநிலையில், கேரள மாநிலத்தில் ரூ. 3.24 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் திருவாரூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், தற்போது ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பள்ளியின் தரம் உயா்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளியை தரம் உயா்த்த கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடா்ந்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அம... மேலும் பார்க்க

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தேவாலயங்கள் 10 ஆண்டுகள... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்

மன்னாா்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டையிலிருந்து பாளையக்கோட்டை செல்லும் 4 கி.மீ தொலைவு சாலை... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை ... மேலும் பார்க்க