உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது
கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற மூதாட்டி பேபி, அவரின் பேத்தி திரிஷா ஆகியோா் மீது அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூதாட்டி பேபி உயிரிழந்தாா்.
இந்த வழக்கை விசாரிக்க வடகரை காவல் துணை கண்காணிப்பாளா் பென்னி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, காா் ஓட்டுநா் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதால் அவரை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கேரளத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்துக்கு வருவதாக கேரள போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு ஏா் அரேபியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த அந்த ஓட்டுரை கேரள போலீஸாா் கைது செய்து கேரளத்துக்கு அழைத்து சென்றனா்.