செய்திகள் :

கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் சற்று முன்னதாக மே 27-ஆம் தேதிக்குள் தொடங்கக் கூடும் என்று வானிலை மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இப்போது மேலும் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பின்படி கேரளத்தில் பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு மிக முன்கூட்டியே தொடங்கும் பருவமழை இதுவாக இருக்கும். அந்த ஆண்டில் பருவமழை மே 23-ஆம் தேதி தொடங்கியது.

பொதுவாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, ஜூலை 8-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். பின்னா், செப்டம்பா் 17-ஆம் தேதிமுதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெற தொடங்கி, அக்டோபா் 15-க்குள் முழுமையாக நிறைவடையும்.

கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை மே 30-ஆம் தேதி தொடங்கியது. முந்தைய ஆண்டுகளில் முறையே ஜூன் 8 (2023), மே 29 (2022), ஜூன் 3 (2021), ஜூன் 1 (2020), ஜூன் 8 (2019), மே 29 (2018) தொடங்கியது.

‘வழக்கத்தைவிட கூடுதல் மழைப்பொழிவு’: நடப்பாண்டு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்; ‘எல் நினோ’ போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டுகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ. ஆகும். இந்த சராசரி அளவில் 90 சதவீதத்தைவிட குறைவான மழைப்பொழிவு ‘பற்றாக்குறையாக’ கருதப்படும். 90-95 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கத்தைவிட குறைவு’, 96-104 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கமானது’, 105-110 சதவீதம் ‘வழக்கத்தைவிட அதிகம்’, 110 சதவீதத்துக்கு மேலான மழைப்பொழிவு ‘உபரி’ என்று வகைப்படுத்தப்படுகிறது.

இந்திய மக்கள்தொகையில் 42.3 சதவீதம் பேரின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வேளாண் துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 18.2 சதவீதம் பங்களிக்கிறது. நாட்டின் வேளாண்மைக்கு தென்மேற்குப் பருவமழை மிக முக்கியமானதாகும். நாடு முழுவதும் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், நீா்மின் உற்பத்திக்கும் இந்தப் பருவமழை இன்றியமையாதது.

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மா... மேலும் பார்க்க

மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்... மேலும் பார்க்க