போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுச...
கேரளா டு UK: பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரியும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இந்த மூனா ஷம்சுதீன்?
இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் UKவின் பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றி வருவது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூனா ஷம்சுதீன் என்பவர் தற்போது பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸின் தனி உதவிச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மூனா ஷம்சுதீன் ஆகஸ்ட் 2023 இல் லண்டனில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்தபோது இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மூனா ஷம்சுதீன்?
கேரளா காசர்கோடைப் பூர்வீகமாகக் கொண்ட மூனா பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்ற பிறகு, அவர் பிரிட்டிஷ் வெளியுறவு சேவைகளில் சேர்ந்தார்.
இங்கிருந்துதான் பக்கிங்ஹாம் அரண்மனையில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அவரது கணவர் டேவிட், ஐ.நா. அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு,
ஜூன் 2008 முதல் செப்டம்பர் 2009 வரை சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறையில் சர்வதேச வர்த்தக அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார்.
செப்டம்பர் 2009 முதல் மார்ச் 2012 வரை அவர் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் ஒரு தூதராக இருந்திருக்கிறார்.
ஏப்ரல் 2012 முதல் ஏப்ரல் 2013 வரை அவர் பிரிட்டிஷ் தூதரகத்தில் இரண்டாவது அரசியல் செயலாளராக இருந்திருக்கிறார்.
ஏப்ரல் 2013 முதல் செப்டம்பர் 2016 வரை பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தில், அவர் அரசியல் தூதராகவும் அரசியல் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
அக்டோபர் 2016 முதல் நவம்பர் 2019 வரை மூனா வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் தூதராகப் பணியாற்றினார். ஜனவரி 2022 முதல் ஜனவரி 2024 வரை அவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் ஒரு தூதராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.