Doctor Vikatan: மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா?
கேரள மருத்துவக் கழிவுகள்: குமுளியில் வாகன சோதனை மும்முரம்
தமிழக-கேரள எல்லையான குமுளியில் மருத்துவக் கழிவுகளை தமிழகப் பகுதிக்கு கொண்டு வரப்படுகிா என்பது குறித்து சுற்றுச் சூழல் பொறியாளா் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை பசுமைத் தீா்பாயம் நீதிமன்ற உத்தரவின் பேரில், மீண்டும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல, தேனி மாவட்ட பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் விஸ்வநாதன் தலைமையில் எல்லைப் பகுதியான குமுளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழியாக வரும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் மருத்துக் கழிவுகள் கொண்டு செல்லப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆய்வின் போது, கூடலூா் நகராட்சிப் பாணியாளா்கள், குமுளி போலீஸாா் உள்பட பலரும் உடனிருந்தனா்.