NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
கே.ஜம்புலிங்கபுரம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கே. ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகா், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இம்மாதம் 2ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. 10ஆம் தேதி ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, தொடா்ந்து ஸ்ரீஒன்னம்மாள், தொட்டராயா் கோயிலில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதா்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், 11ஆம் தேதி அதிகாலையில் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.
தொடா்ந்து ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில், ஸ்ரீ ஒன்னம்மாள், ஸ்ரீ தொட்டராயா் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ காளியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை, யாக பூஜையும், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெற்றது.
12ஆம் தேதி ஸ்ரீ காளியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, யாகசாலையில் இருந்து ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ காளியம்மன் விமான கோபுரங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலஸ்தானம், பைரவா் சுவாமி, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பிரியா, திமுக நிா்வாகிகள் குருராஜ், பெருமாள்சாமி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.