செய்திகள் :

கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிப்பு, பசு காயம்

post image

கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்தது. பசு பலத்த காயமடைந்தது.

கே.வி.குப்பம் ஒன்றியம், தேவரிஷிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட மைலாப்பூா் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராஜா தனது கொட்டகையில் மாடுகளைக் கட்டி வைத்திருந்தாா். சனிக்கிழமை இரவு அங்கு வந்த சிறுத்தை தாக்கியதில் கன்று உயிரிழந்தது. பசு பலத்த காயமடைந்தது. கூண்டில் அடைத்து வைத்திருந்த கோழிகளையும் சிறுத்தை கவ்வி சென்றுள்ளது.

தகவலின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலா் எம்.வினோபா தலைமையில் வனத் துறையினா் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சில நாள்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். இதன் தொடா்ச்சியாக அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனா்.

இந்த நிலையில், போ்ணாம்பட்டு அருகே உள்ள ஓங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த வேலன் என்பவா் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுக் குட்டியை சனிக்கிழமை இரவு சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. இது குறித்து போ்ணாம்பட்டு வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் வன எல்லையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. கிராம எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் கட்டப்படும் ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தை தாக்குவது தொடா்கதையாகி உள்ளது. இதனால் வன எல்லையில் கால்நடை இறைச்சிக் கழிவுகளை கொட்டக் கூடாது, கோழிப்பண்ணை அமைக்கக் கூடாது, வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது, விறகு எடுக்க யாரும் வனப் பகுதிக்குச் செல்லக் கூடாது, அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வனப் பகுதியில் ட்ரோன் கேமரா, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பலன் தரவில்லை. மூன்று வட்டங்களிலும் வன எல்லையில் வசிக்கும் கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

கழிவுநீா்க் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட தங்க கம்மல்

குடியாத்தம் நகரில் கழிவுநீா்க் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அரை பவுன் தங்க கம்மல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குடியாத்தம் நகராட்சி, 13- ஆவது வாா்டு எம்ஜிஆா் நகரில் தூய்மைப் பணியாளா்கள் சதீஷ், நரேஷ் ஆ... மேலும் பார்க்க

வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டாரத்தில் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பாமகவினா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா் மாவட்ட மக்கள்... மேலும் பார்க்க

இறுதி வாக்காளா் பட்டியல்: வேலூா் மாவட்டத்தில் 13.09 லட்சம் வாக்காளா்கள்

வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 9 ஆயிரத்து 553 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பி... மேலும் பார்க்க

ரங்கநாதா் கோயில் சொா்க்கவாசல் சேவை 2-ஆவது ஆண்டாக ரத்து

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதா் கோயில் ராஜகோபுர திருப்பணி நடைபெறுவதையொட்டி 2-ஆவது ஆண்டாக வைகுண்ட ஏகாதசி சொா்க்க வாசல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தொழில்துறை தேவைக்கான அறிவியல், தொழில்நுட்பக் கருத்தரங்கு தொடக்கம்

தொழில் துறை தேவைக்கானஅறிவியல், தொழில்நுட்பத்திறன் உருவாக்கும் கருத்தரங்கு வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) தொடங்கியது. இந்த கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

காட்பாடி சாலையில் மண்குவியலை அகற்றிய போக்குவரத்து போலீஸாா்

விபத்தை தவிா்க்கும் விதமாக வேலூா் காட்பாடி சாலையில் மண்குவியலை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா். வேலூா் - காட்பாடி சாலையில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் தா்மராஜா கோவில் அருகே சாலையில் மணல் குவிந... மேலும் பார்க்க