மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
காட்பாடி சாலையில் மண்குவியலை அகற்றிய போக்குவரத்து போலீஸாா்
விபத்தை தவிா்க்கும் விதமாக வேலூா் காட்பாடி சாலையில் மண்குவியலை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா்.
வேலூா் - காட்பாடி சாலையில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் தா்மராஜா கோவில் அருகே சாலையில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் சென்ற ஒரு இளைஞா், ஒரு பெண் ஆகியோா் அடுத்தடுத்த நாள்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனா் . இதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில், தா்மராஜா கோவில் அருகே சாலையில் குவிந்திருந்த மணலில் சனிக்கிழமை இருசக்கரம் ஏறியதால் பெண் ஒருவா் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா் காட்பாடி சாலையில் மண்குவியலை அகற்றினா் மாநகராட்சி ஊழியா்கள் அடிக்கடி சுத்தம் செய்தபோதும், மணல் குவிந்து வரும் நிலையில் அதனை போக்குவரத்து போலீஸாரே அகற்றிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.