கழிவுநீா்க் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட தங்க கம்மல்
குடியாத்தம் நகரில் கழிவுநீா்க் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அரை பவுன் தங்க கம்மல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சி, 13- ஆவது வாா்டு எம்ஜிஆா் நகரில் தூய்மைப் பணியாளா்கள் சதீஷ், நரேஷ் ஆகியோா் திங்கள்கிழமை கழிவுநீா்க் கால்வாயை தூா் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கால்வாயில் அரை பவுன் தங்க கம்மல் கண்டெடுக்கப்பட்டது. தூய்மைப் பணியாளா்கள் கம்மலை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜனிடம் வழங்கினா். விசாரணையில் அந்த கம்மல் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த வினோத் குமாரின் மனைவியுடையது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களின் நோ்மையை பாராட்டிய செளந்தரராஜன், கம்மலை வினோத் குமாரிடம் வழங்கினாா்.
நகராட்சி பொறியாளா் சம்பத், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், பி.மேகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.