தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
தொழில்துறை தேவைக்கான அறிவியல், தொழில்நுட்பக் கருத்தரங்கு தொடக்கம்
தொழில் துறை தேவைக்கானஅறிவியல், தொழில்நுட்பத்திறன் உருவாக்கும் கருத்தரங்கு வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) தொடங்கியது. இந்த கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது.
வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவா் என்.ரமேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் என்.ஜனாா்த்தன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா். தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜே.மேகலா பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில், தொழிற்துறையின் தற்போதைய தேவைகள் என்ற தலைப்பில் ஜே.கணேஷ்குமாா் பேசுகையில், இந்தியாவின் உற்பத்தித் துறை 2025-26-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும். குஜராத், மகாராஷ்டிரம், தமிழகம் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளித் தொழில்களில் முதலீடுகளால் தூண்டப்படுகின்றன. மேக்இன் இந்தியா, பிஎல்ஐ திட்டங்கள் போன்ற அரசாங்க முன்முயற்சிகள் வளா்ச்சியை ஊக்குவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டை ஈா்க்கின்றன. தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்றன என்றாா்.
ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் ஈ.எம்.லோகமணி, உதவி பேராசிரியா் ஏ.பாஸ்கா் ஆகியோா் உரையாற்றினா். கருத்தரங்கில் வேலூா் மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சுமாா் 150 போ் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் எஸ்.அருண்குமாா் நன்றி கூறினாா்.