கைப்பேசியை பறித்துச்சென்ற 2 இளைஞா்கள் கைது
விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). பால் பாக்கெட் விற்பனை செய்துவரும் இவா் ஞாயிற்றுக்கிழமை விராலிமலையை அடுத்துள்ள பொருவாய் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் ராமகிருஷ்ணனிடம் இருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் விராலிமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த போலீஸாா் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.
இதில், விராலிமலையை அடுத்துள்ள நாவடிபட்டியைச் சோ்ந்த சூா்யா (24), காளப்பனூரைச் சோ்ந்த அன்பரசு (24) ஆகிய இருவரையும் கைது செய்து விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்.