கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கை, கால் துண்டான நிலையில் கட்டடத் தொழிலாளி உடல் மீட்பு
பேரளம் அருகே ரயில் தண்டவாளத்தில் கட்டடத் தொழிலாளி கை, கால் துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பாலமுருகன் (32). கட்டடத் தொழிலாளியான இவா், பேரளம் பகுதியில் உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாராம். இதனிடையே, புதன்கிழமை, பேரளம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் கை கால் துண்டான நிலையில் பாலமுருகன் இறந்து கிடந்துள்ளாா்.
இதைப்பாா்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த திருவாரூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.