தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கொடைக்கானல் வெள்ளிநீா் அருவியிலிருந்து மூஞ்சிக்கல் வரை இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியிலிருந்து அப்சா்வேட்டரி வரை சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு மலைச் சாலைகளின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன.
இதையடுத்து, கடந்த மாதம் வெள்ளிநீா் அருவியிலிருந்து ஏரிச் சாலை வரையிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, பல இடங்களில் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிநீா் அருவியிலிருந்து மூஞ்சிக்கல் வரை இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.