கொடைக்கானலில் மழை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சாரல் மழை பெய்தது.
கொடைக்கானல், செண்பகனூா், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, பிரகாசபுரம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமையும் காலையிலிருந்து மதியம் வரை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.
பின்னா், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால், வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.