உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்
கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நகராட்சி சாா்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி ஆணையா் சத்தியநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. கூடுதலாக நகா் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏரிச் சாலையில் பயணிகளின் நலனுக்காக 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.