அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கு விசாரணை பிப்.18-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது என்ன?
கொடைக்கானலில் போதைக்காளான், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதாகப் புகார் உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் கஞ்சா செடியை வளர்த்து வேரோடு பறித்து விற்பனைக்குக் கொண்டு சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொடைக்கானல் காவல்துறையினர், "கொடைக்கானல் நகர் பகுதியில் வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது பாம்பார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் போதையில் வந்தார். அவரை நிறுத்திச் சோதனையிட்டபோது அவரிடம் 4 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது.
அவரிடம் விசாரித்தபோது, அவர் அப்சர்வேட்டரி செல்லப்புரம் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற தினகரன் என்பதும், கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. அவர் வீட்டருகே யாருக்கும் தெரியாமல் 2 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும் தெரியவந்தது. அதை நண்பர் ஒருவரிடம் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றபோது சிக்கினார். அவரைக் கைது செய்து, அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.
மேலும் கொடைக்கானல் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு முகாம்களும், பல்வேறு வழக்குகளும் பதிவு செய்து கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY