செய்திகள் :

கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளா்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து உத்தர பிரதேசத்தில் 5,264 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டதையும், அவா்களில் 1,101 பேருக்கு மட்டுமே உடனடியாக நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், கொத்தடிமைகளாக இத்தனை போ் இருந்தது அச்சமூட்டுவதாக உள்ளது என்று தெரிவித்தனா்.

இதையடுத்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘சில நேரங்களில் அண்டை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறாா், அங்கு கொத்தடிமைகளாகப் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.

இந்த விவகாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீா்வு காண வேண்டும். எனவே அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளா் துறைச் செயலா்களுடன் மத்திய தொழிலாளா் துறைச் செயலா் கூட்டம் நடத்தி, வெவ்வேறு மாநிலங்களுக்கு சிறாா்கள் உள்ளிட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

அந்தத் திட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளா்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குவதற்கு உதவ எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையும் இடம்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துகளையும் மத்திய அரசு பெற வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுமாறு அட்டாா்னி ஜெனரலிடம் கேட்டுக்கொண்டனா். இந்த மனு மீதான அடுத்த விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?

மகாராஷ்டிரப் பேரவைக்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவ. 23ஆம் தேதி சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சி... மேலும் பார்க்க

பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரி சிசோடியா மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் தில்லி துணை முதல்வர் ம... மேலும் பார்க்க

ஒ.எஸ்.ஆர்.சி.பி. - அதானி குற்றச்சாட்டுக்கு அமைதி காக்கும் தெலுங்கு தேசம்! காரணம் என்ன?

அதானி விவகாரத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சி ஒ.எஸ்.ஆர்.சி.பி.யின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆளுங்கட்சி தெலுங்குதேசம் கருத்து தெரிவிக்காமல் இருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.சூரிய ஒளி மின்சார... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வருக்கான சண்டை கூட்டணிக் கட்சிக்குள் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ. 20... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், விஷ்ணுபூரின் இம்பாலில் இன்று அதிகாலை 3.6 ரிக்... மேலும் பார்க்க

முக்கிய சதிகாரர்களுடன் பாபா சித்திக் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி?

புது தில்லி: மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முக்கிய சதிகாரர்களுடன் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி என்ற தகவல் வெளிவந்துள்ளது... மேலும் பார்க்க