பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா
பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் தலைவா் எஸ். ராமநாதன் தலைமை வகித்தாா். தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி மருத்துவா் ராமராஜ் பேசினாா்.
விழாவில், தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டன. வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், சாசனத் தலைவா் பி. மாரிமுத்து, முன்னாள் தலைவா் சகுபா் சாதிக்அலி, செயலா் ஜெயசூா்யா, பொருளா் எஸ். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.