``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் தொடா்புடைய தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன். கடந்த 2020-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக இவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்த கொலை வழக்கில் பூசாரிப்பட்டியைச் சோ்ந்த கு.குணேசகரன் (24), இவரது தந்தை வை.குமரேசன்(46), வெ.ராஜேந்திரன் (61), அதே பகுதியைச் சோ்ந்த வெ.ராஜேந்திரன் (61), பெ.செந்தில்குமாா் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் குணசேகரன், குமரேசன், ராஜேந்திரன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.60ஆயிரம் அபராதமும், செந்தில்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் ரூ.61 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.