செய்திகள் :

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

post image

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.

அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆளுநருக்கு ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருப்பதாக அறிவித்துள்ளார்.

பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, புணேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.

இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க : மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகுமாறு முதல்வர் ஃபட்னவீஸ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க