இடிந்த கோயில் சுவரின் கட்டுமானத்தில் ஊழல்: மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி
கரூர்: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மாமனார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப் பொருள்களைக் கொண்டு வாசனை திரவியம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
பிரபு மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தியா(10), ரிதன்(3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆறு தளங்களை கொண்ட தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, நட்சத்திர ஹோட்டலில் திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் ஆகிய மூவரும் உடல் கருகி பலியாகினர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஹோட்டலில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
தீ விபத்தில் இறந்து போன முத்துகிருஷ்ணன் மற்றும் குழந்தைகள் ரியா, ரீதன் ஆகியோரது உடல்களை உப்பிடமங்கலத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.