கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது...
கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்
கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
பலியான பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சத்தை மேற்கு வங்க மாநில அரசு வழங்க வேண்டும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
பலியான பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சத்தை மேற்கு வங்க அரசு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை தண்டனை குறித்து இரு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக, சிபிஐ தரப்பில், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.