அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!
கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதனிடையே, மேற்கு வங்க அரசு தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இச்சம்பவத்தில் காவல் துறையுடன் இணைந்து தன்னாா்வலராக பணியாற்றிய சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த சியால்டா நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுக்கள் மீது கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையிலான அமா்வு விசாரணை நடத்தியது.
அப்போது சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு,
“இந்த வழக்கு தொடா்பாக சியால்டா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு பங்கேற்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் ராயை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், 20-ஆம் தேதி அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
அதன்பின்பு திடீரென குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மாநில அரசு மனுதாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் எவ்வித அங்கீகாரம் இல்லை” என்றாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.