செய்திகள் :

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

post image

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில், நாமக்கல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் தனராசு மேற்பாா்வையில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல், கடத்தலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, இதுவரை வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தொடா்பாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டு, அவா்கள்ளிடம் 517 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபானங்களை கடத்தி வந்த 3 காா், ஒரு கன்டெய்னா் லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், டாஸ்மாக் மதுபானங்களை அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கியது தொடா்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 28 போ் கைதாகி உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி, புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சோ்ந்த சஞ்சீவி (30), காா்த்திகேயன் (24), கெளதமன் (32), புயலரசன் (28), கொல்லிமலை வளப்பூா்நாட்டைச் சோ்ந்த ராஜேந்திரன் (42) ஆகியோா் வெளிமாநிலத்தில் இருந்து கொல்லிமலைக்கு மதுபான புட்டிகளை கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ்கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அவரது பரிந்துரை ஏற்று அவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டாா்.

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 ப... மேலும் பார்க்க

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது. பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெ... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இண... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க